பல கிராமங்களில் உள்ள கடைகளில் ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே நாணயம் செல்லாது என கூறுவதோ, அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாணயம் அனைத்து வகையிலும் செல்லத்தக்கதே, பொதுமக்களை அலைக்கழிப்புக்கு ஆளாக்காமல் கடை உரிமையாளர்கள் இந்த நாணயத்தை அனைத்து பரிவர்த்தனைக்கும் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post ரூ.10 நாணயம் வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம்: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.