- Bandalur
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- நெல்லியலம்
- மார்க்சிஸ்ட்
- பந்தலூர் இந்திராநகர்
- நீலகிரி மாவட்டம்
- தின மலர்
பந்தலூர், அக்.1: அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லியாளம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பந்தலூர் கிளை சார்பாக மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் பெரியார் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
மாவட்ட குழு உறுப்பினர் வர்கீஸ், பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் இராசி இரவிக்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பந்தலூர் பஜாரில் இருந்து நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று, நகராட்சி ஆணையாளர் முனியப்பனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
The post அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.