×

நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை

பாலக்காடு, டிச.19: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், கிடங்கூரை சேர்ந்த தம்பதியினர் மகள் 21 வயது ஆனவர். இவர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  இவர் கல்லூரி அடுத்துள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். இந்நிலையில் மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லாமல் விடுதி அறையில் தங்கியுள்ளார்.

சக மாணவிகள் கல்லூரிக்கு சென்ற பின்னர், தனியாக இருந்த மாணவி மின் விசிறியில் சால்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்லூரிக்கு சென்ற சக மாணவிகள் திரும்பி விடுதிக்கு வந்து கதவை தட்டியுள்ளனர். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவிகள் வார்டனுக்கு தகவல் அளித்து போலீசாரை வரவழைத்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.

The post நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Kidangur ,Kottayam district ,Kerala ,Kozhikode Government Medical College ,Dinakaran ,
× RELATED நெல்லியாம்பதி மலைப்பாதையில்...