மஞ்சூர், டிச.21: மஞ்சூர் சாலையோரங்களில் பூத்துள்ள காட்டு சூரியகாந்தி மலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் ஏற்கனவே ரெட்லீப், பாட்டில்பிரஷ் உள்ளிட்ட பலவகையிலான வண்ண மலர்கள் பூத்துள்ளது. தற்போது மஞ்சள், சந்தனம் மற்றும் வெள்ளை நிறங்களில் காட்டு சூரியகாந்தி மலர்கள் ஏராளமாக பூத்து குலுங்குகின்றன.
‘ஹீலியன்ந்தாஸ் டெபீலிஸ்’ என்ற தாவர வகையை சேர்ந்த இம்மலர்கள் ஆண்டுக்கொருமுறை பூக்கும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. செடிகளில் கொத்து, கொத்தாக பூத்துள்ள இம்மலர்கள் மஞ்சூர் சுற்றுபுறங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது. இம்மலர்களின் அருகில் நின்று செல்பி எடுப்பதிலும் பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
The post பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்கள் appeared first on Dinakaran.