×

கொட்டரகண்டியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த கோரிக்கை

 

மஞ்சூர், டிச.21: கொட்டரகண்டி பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கொட்டரகண்டி பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் கழிப்பிட வசதி இல்லை.

இதனால் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய தேயிலை தோட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன் வனப்பகுதிகளில் செல்லும் போது காட்டு மாடுகள், கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகளின் நடமாட்டத்தால் அச்சம் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து கொட்டரகண்டியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

The post கொட்டரகண்டியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kottarakhandi ,Manjur ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED நீர்வரத்து அதிகரிப்பால் தென்கரைக்கோட்டை ஏரிக்கரையில் விரிசல்