×

கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

கோத்தகிரி, டிச.18: கோத்தகிரி பேருந்து நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதி வருகையையொட்டி சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்பட்டது. மேலும் அகற்றப்பட்ட வேகத்தடைகள் இதுவரை போடப்படாமல் இருப்பதால் பிரதான சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் அதிக அளவில் கூடும் இடமாக கோத்தகிரி பேருந்து நிலையம் இருக்கிறது. இதனால் பேருந்து நிலையம் பகுதியில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,President ,Dinakaran ,
× RELATED கோத்தகிரியில் மேக மூட்டம் நிலவுவதால்...