×

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்துகள் அம்பேத்கர் மீதும், அரசியல் சாசன சட்டத்தின் மீதும் ஆர்.எஸ்.எஸ். பாஜவிற்கு இருக்கும் ஆழமான வெறுப்புணர்வின் வெளிப்பாடே ஆகும். உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கிற அமித்ஷா அரசியல் முதிர்ச்சியின்றி தன்னை ஆர்.எஸ்.எஸ்.ன் அடிமட்ட தொண்டன் என்று நிரூபிக்கும் விதமாக அவரது உரை இருந்துள்ளது.

எனவே, அமித்ஷா உள்துறை அமைச்சராக நீடிப்பதற்கு எள்முனை அளவும் தகுதி அற்றவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. அம்பேத்கரை அவதூறாகவும், அவமரியாதையாகவும் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலகக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Ambedkar ,Marxist Communist ,Chennai ,Marxist Communist Party ,Secretary of State ,Balakrishnan ,Interior Minister ,R. S. S. Bajaj ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…