திருமலை : ஆந்திராவில் இடிதாக்கி கணவன், மனைவி பலியான நிலையில், மகன் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டலம் கீழ் கங்கம்பள்ளியில் நேற்று திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடியுடன் கனமழை வெளுத்து வாங்கியதால் வெள்ள நீர் சாலைகளில் ஆறாக ஓடியது. அப்போது அதேபகுதியை சேர்ந்த தாசரதி நாயக்- தேவி தம்பதி, அவர்களது மகன் ஜெகதீஷ் நாயக் என்பவருடன் மாட்டு கொட்டகை அருகே மழையில் நனைந்தபடி வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
அந்த நேரத்தில் பலத்த சத்தத்துடன் இடிவிழுந்தது. இதில் தம்பதி இருவரும் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஜெகதீஷ் நாயக்கை மீட்டு சிகிச்சைக்காக புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாட்டு கொட்டகை மீதும் இடி விழுந்ததால் 2 பசுமாடுகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post ஆந்திராவில் இடிதாக்கி கணவன், மனைவி பலி appeared first on Dinakaran.