நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

டெல்லி: கொல்கத்தாவை சேர்ந்த 74 வயதான நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு ஒன்றிய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு பெங்காலியில் வெளியான ‘மிரிகயா’ என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சந்தால், டிஸ்கோ டான்சர், கோல்மால், தாதா, டைகர் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘யாகாவா ராயினும் நாகாக்க’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் இவருக்கு ஒன்றிய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து, நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “மிதுன் சக்ரவர்த்தி தாதாசாகேப் பால்கே விருதுக்கு தகுதியானவராக இருப்பதற்கு வாழ்த்துக்கள். இந்திய சினிமாவுக்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சினிமாவில் அவர் முத்திரை பதித்ததற்கு இந்த விருது ஒரு சிறந்த உதாரணம்.

தொழில்முறை மற்றும் தனிப்பட்ட முன்னணியில் அவருக்கு மேலும் வெற்றி மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். அக்டோபர் 8, 2024 அன்று நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

The post நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: