பீகாரில் 13 மாவட்டங்களில் 5-வது நாளாக தொடரும் கனமழை: கடும் வெள்ளப் பெருக்கால் 13.50 லட்சம் பொதுமக்கள் பாதிப்பு

பீகார்: பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 13 மாவட்டங்களை சேந்த 13 லட்சத்து 50ஆயிரம் பேர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். பீகார் மாநிலத்தின் வக்சர், போச் போர்,பாட்னா, சமஸ்தி பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கடந்த 26ம் தேதி முதல் அதிகனமழை பெய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் காட்டாறு போல வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது குடிசைகள், கிராமங்களில் பல ஆயிரம் வீடுகளை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்கிறது. இதனால் சுமார் 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பல இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையே பீகாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. பீகாரில் உள்ள சில ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது . அணைகளை உடையாமல் தடுக்க வாலமீகி நகரில் உள்ள கண்டக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 6 லட்சத்து 87 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கொசிபிற்கூர் தடுப்பணையில் இருந்தும் 7.54 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்த ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

 

The post பீகாரில் 13 மாவட்டங்களில் 5-வது நாளாக தொடரும் கனமழை: கடும் வெள்ளப் பெருக்கால் 13.50 லட்சம் பொதுமக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: