திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 524 கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2ம் தேதி காலை 11 மணியளவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம்,
ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டங்களில் அந்த ஊராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும் கிராமசபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 524 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.