சென்னை : எனது பேச்சு மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைதான மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.