கூடலூர் ஹெல்த் கேம்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

ஊட்டி, செப் 26: கூடலூர் ஹெல்த் கேம்ப் பகுதியில் ரூ.38.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், ஹெல்த்கேம்ப் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.38.90 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ஆகியவை 61.60 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் தரைத்தளமாக கட்டப்பட்டுள்ளது. வராண்டா, ஹால் மற்றும் கழிவறையுடன் கூடிய படுக்கையறை, சமையல் அறை மற்றும் உணவருந்தும் அறை ஆகிய வசதிகளுடன் கூடிய குடியிருப்பு மற்றும் அலுவலக அறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு நேற்று சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடலூர் ஆர்டிஓ செந்தில்குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் ரமேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் அழகப்பன், நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி கலந்து கொண்டனர்.

The post கூடலூர் ஹெல்த் கேம்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: