புதிய கான்கிரீட் சாலை பயன்பாட்டிற்கு திறப்பு

பந்தலூர், செப்.25: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பந்தகாப்பு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு நடைபாதை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று நீலகிரி எம்பி ஆ.ராசா பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனை பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஸ் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் ஞானசேகர், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெயந்தி கருப்பசாமி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மைமூனா, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சித்ரா துரைசாமி மற்றும் நிர்வாகிகள் நஜீபுதீன், ராஜன், சிவகுமார், சிவதாசன், நடராஜ், செல்வரத்தினம், தயானந்தன், தமிழரசன் தங்கப்பழம் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு நீலகிரி எம்பி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர், மாவட்ட திமுக செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

The post புதிய கான்கிரீட் சாலை பயன்பாட்டிற்கு திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: