ஊட்டி, செப். 27: திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவை முன்னிட்டு ஊட்டி நகர திமுக சார்பில் படகு இல்லம் பகுதியில் கொடியேற்று விழா நடந்தது. திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவை முன்னிட்டு ஊட்டி நகர திமுக சார்பில் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொடியேற்று விழா நாள் தோறும் நடைபெற்று வருகிறது. நேற்று ஊட்டி நகராட்சிக்குட்பட்ட படகு இல்லம் பகுதியில் உள்ள நுழைவு வாயில் பகுதியில் கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்து கொடியேற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் இனிப்புகளை வழங்கினார். மாவட்ட பொருளாளர் நாசர்அலி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர் ராஜா, பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்த்திக், ஊட்டி நகர அவை தலைவர் ஜெயகோபி, துணை செயலாளர்கள் ரீட்டாமேரி, கார்டன் கிருஷ்ணன், பொருளாளர் அணில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மஞ்சுகுமார், ரமேஷ், ஜெயராமன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், கீதா, நாகமணி, மேரி புளோரினா, புளோரினா, வனிதா, திவ்யா, மீனா, விஷ்ணுகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் புஷ்பராஜ், ரவீந்திரன், கிளை நிர்வாகிகள் ஹென்றி, கமலகண்ணன், காந்தல் சம்பத், ஸ்டீபன், சுரேஷ், ரஞ்சித், அந்தோணி குரூஸ், நிக்கோலஸ், விஷ்ணுகுமார், முஸ்தபா, டிடோன், சீனிவாசன், ரங்கநாதன், தங்கராஜ், மகளிர் அணியை சேர்ந்த லூயிசா, பிரேமா, பியூலா ஜெனட், பிருந்தா, ஷீலா, திரேசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பவள விழாவை முன்னிட்டு நகர திமுக சார்பில் படகு இல்லம்: பகுதியில் கொடியேற்று நிகழ்ச்சி appeared first on Dinakaran.