இந்தியா – சீனா இடையிலான உறவு ஆசியாவுக்கு மட்டுமல்ல… உலகுக்கே முக்கியம்: நியூயார்க்கில் ஒன்றிய அமைச்சர் பேச்சு

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு ஆசியா மற்றும் உலகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற நிகழ்வில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசுகையில், ‘உலகளவில் ஆசிய நாடுகள் இன்று மாற்றத்திற்கான காலகட்டத்தில் உள்ளது. ஆசியாவில் அந்த மாற்றத்தை இந்தியா முன்னெடுத்து வருகிறது. இந்த மாற்றம் உலக அளவில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியா – சீனா இடையிலான உறவு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஆசியாவின் எதிர்காலம் உலகத்திற்கே மிகவும் வலுவூட்டுவதாக உள்ளது. எனவே இந்தியா-சீனா உறவு ஆசியாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, உலகின் எதிர்காலத்திற்கும் முக்கியம். தற்போதைய சூழ்நிலையில், எதிர்கால முன்னேற்றங்களுக்கு இந்தியா தயாராக வேண்டும். அதற்கான சாதகமான சூழ்நிலையையும் உருவாக்க வேண்டும். உலகின் சிறந்த பொருளாதாரங்களில் ஆசிய நாடுகள் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த நிலையிலிருந்து இது மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும்’ என்றார்.

The post இந்தியா – சீனா இடையிலான உறவு ஆசியாவுக்கு மட்டுமல்ல… உலகுக்கே முக்கியம்: நியூயார்க்கில் ஒன்றிய அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: