பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

நெல்லை, செப். 25: நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாவட்ட ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் மோகன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோக்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும், ஆர்டிஒ அலுவலகத்தில் ஸ்டிக்கர் பிரச்னை, புகை சான்று உள்ளிட்டவைகளுக்கான கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், ஓட்டுநர்களுக்கு பாதகமாக இருக்கக்கூடிய புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் தருவதாக கூறிய தமிழக அரசு உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் தேவி, பாட்ஷா, சற்குணம், நாகராஜன் இசக்கியம்மன், முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட பொருளாளர் வளரி பெருமாள் நன்றி கூறினார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: