கோவை, செப். 25: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சர்வன்குமார் (25). இவர் கோவை பெரியகடை வீதியில் தங்கி வெள்ளி விநாயகர் கோயில் அருகே நகைப்பட்டறை நடத்தி வந்தார். இரவு ராஜஸ்தானில் உள்ள தனது பெற்றோரிடம் செல்போனில் பேசி விட்டு வீட்டு மாடிக்கு தூங்க சென்றார். காலை வெகு நேரமாகியும் அவர் பட்டறைக்கு செல்லவில்லை. இதனால், சந்தேகமடைந்த பக்கத்து நகைப்பட்டறையை சேர்ந்த அருணகிரி என்பவர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார்.
வீட்டில் அவர் இல்லாததால் மாடிக்கு சென்று பார்த்தார். படுக்கையில் இருந்த சர்வன்குமாரை எழுப்ப முயன்றபோது, அவர் பேச்சு மூச்சின்றி உடல் அசைவில்லாமல் கிடந்தார். உடனே அவர் ராஜஸ்தானில் உள்ள சர்வன்குமார் உறவினர்களுக்கும், வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post அக்னி சட்டி ஊர்வலம் நகை பட்டறை உரிமையாளர் மர்ம சாவு appeared first on Dinakaran.