காரில் கடத்திச் சென்று தேனி நர்சிங் மாணவி கூட்டு பலாத்காரம்


தேனி: தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று காலை தனது ஊரில் இருந்து தேனிக்கு பஸ்சில் வந்துள்ளார். அப்போது அவரை பெண் ஒருவர், பின்தொடர்ந்து வருவதாக தந்தைக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். மாணவியின் செல்போன் சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் தந்தை தேனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதன்பின் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மர்ம நபர்கள் மாணவியை காரில் கடத்திச சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு தப்பி சென்றதாகவும் தெரிகிறது. இதையடுத்து மாணவி ரயில் நிலைய பாதுகாப்பு பணி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் திண்டுக்கல் மகளிர் போலீசார், மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து மருத்துவமனையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் உள்ளிட்டோர் மாணவியிடம் 1 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தனர். அப்போது திடீரென மாணவிக்கு வலிப்பு ஏற்படவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்த பின்பு கூட்டு பலாத்காரம் தொடர்பாக மாணவி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார் என போலீசார் தெரிவித்தனர். மாணவி புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மகளிர் ஸ்டேஷனில் பிஎன்எஸ் பிரிவு 70(1)ன்படி கூட்டுப் பலாத்கார குற்றம், பிஎன்எஸ்-87 பிரிவின்படி சட்டவிரோத பாலியல் சம்பவங்களுக்காக பெண் கடத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்படி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் இணைந்து மாணவி சென்ற இடங்களில் செல்போன் டவர், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post காரில் கடத்திச் சென்று தேனி நர்சிங் மாணவி கூட்டு பலாத்காரம் appeared first on Dinakaran.

Related Stories: