குமாரபாளையம், செப்.24: குமாரபாளையம் கிளை நூலக வாசகர்கள் வட்ட கூட்டத்தில் பள்ளிக் குழந்தைகள கதை சொல்லி அசத்தினர், குமாரபாளையம் அரசு கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது. தலைவர் விடியல் பிரகாஷ் தலைமை தாங்கி வாசிப்பை நேசிப்போம், சிறுகதைகள் திருவிழா என்ற தலைப்பில் பேசினார். கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சிறுகதை திருவிழாவில் கதைகள் சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். கூட்டத்தில் எழுத்தாளர்கள் கேசவ மூர்த்தி, ராஜகோபாலன், கவிஞர் குமரேசன், ஆசிரியர் பங்கஜம், நலவாரிய செல்வராஜ், முனைவர் சண்முகம், ஆகியோர் பேசினர். மருத்துவர் சண்முகசுந்தரம் நன்றி கூறினர். கூட்டத்தில் ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, பன்னீர், தீனா, ஜெகதீஸ்வரி, சுரேஷ், தமிழ், பன்னீர்செல்வம், ரூத், ஜமுனாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post கதை சொல்லி அசத்திய குழந்தைகள் appeared first on Dinakaran.