மல்லசமுத்திரம், டிச.25: மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார திருட்டில் ஈடுபடுவதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று உதவி கணக்கு அலுவலர் ஆறுமுகம் தலைமையில் 20 பேர் கொண்ட அதிகாரிகள் வீடு வீடாக மற்றும் கடைகளுக்கு சென்று மின் இணைப்புகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது விதிகளை மீறி மின்திருட்டில் ஈடுபட்ட 13 நபர்களுக்கு ₹1.50 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். ஆய்வின்போது, மல்லசமுத்திரம் உதவி செயற்பொறியாளர் அமுதா, டவுன் இளநிலை பொறியாளர் முருகன், கார்த்தி, வள்ளி, திருநாவுக்கரசு, உதவி கணக்கு அலுவலர் ராஜம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
The post மின்சாரம் திருடிய 13 பேருக்கு ₹1.50 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.