சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற ரோட்டரி கல்வி விருதுகள் விழா: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

சென்னை: கல்லூரிகளுக்கான ரோட்டரி எமினன்ஸ் விருதுகள் மற்றும் 100 ஆசிரியர்களுக்கு ரோட்டரி சிறப்பு விருதுகளுடன் நகரின் முதல் 8 கல்லூரிகளை கௌரவிக்கும் விழா ஏத்திராஜ் கல்லூரியில் நடைபெற்றது. 2024ம் ஆண்டிற்கான என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் இருந்து கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

மேலும் பல்வேறு அரசு நடத்தும் பள்ளிகள், சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், இண்டராக்ட் பள்ளிகள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான பள்ளிகளில் இருந்து பள்ளிகளின் முதல்வர்கள்/தலைமைகள் பரிந்துரைகள் மூலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பிரதம விருந்தினர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்; கெளரவ விருந்தினர் – ஆர்.எம்.முருகானந்தம், ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குநர் (தேர்வு); சிறப்பு விருந்தினர்கள் – இ.பரந்தாமன், எம்.எல்.ஏ., எழும்பூர் தொகுதி, அரசு. தமிழ்நாடு மற்றும் சி.கே.ரங்கநாதன், CMD, கவின்கேயர் ஆகியோர் இந்நிகழ்வின் கலந்து கொண்டனர். மஹாவீர் போத்ரா, மாவட்ட கவர்னர் (ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233) வழிகாட்டுதலின்படி விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

The post சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற ரோட்டரி கல்வி விருதுகள் விழா: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: