மேலும் கம்போடியாவில் 06.10.2024 முதல் 13.10.2024 வரை நடைபெற உள்ள ஆசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள 5 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மற்றும் உஸ்பெக்கிஸ்தானில் வருகிற 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ள கிக் பாக்ஸிங் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள 11 வீரர், வீராங்கனைகளுக்கு செலவீன தொகையாக தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். ஸ்பெயினில் நடைபெற உள்ள உலக ஸ்ட்ராங்மேன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள டி.கண்ணனுக்கு செலவின தொகையாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும்.
உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற உள்ள 8வது ஆசிய பென்காக் சிலாட் 2024 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள 7 வீரர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் மற்றும் சீனாவில் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள WDSF உலக பிரேக்கிங் நடன விளையாட்டு யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள பிரேம் காந்தி மற்றும் ஆராதனா ஆகியோருக்கு செலவின தொகையாக தலா ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை மற்றும் அ.கருணாசாகர், ஆர்.பிரணவ் சாய் இருவக்கும் ஸ்கேட்டிங் உபகரணங்கள் வாங்குவதற்காக தலா ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சத்திற்கான காசோலைகள்: அமைச்சர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.