பாக்ஸ்கான் நிறுவனம் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: தமிழக அரசு அறிவுரை

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பாக்ஸ்கான் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி, கடந்த 18ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 23ம் தேதி மாலை தலைமைச் செயலகத்தில், தொழில்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், காவல்துறை சட்டம், ஒழுங்கு கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன், பாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசுத் தரப்பில் ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இதில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த், கிர்லோஷ் குமார், சிறப்புச் செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன், வழிகாட்டு மையத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்த், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குநர் ஜெகதீசன் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பாக அதன் இயக்குநர் கேரிசௌ, ஆலோசகர் டி.பி.நாயர் ஆகியோர் பங்கேற்றனர்.அதன்படி, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் சூழ்நிலைகளை மேம்படுத்தித்தர வேண்டும்.அவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும். தங்கும் இடத்திலேயே சமையலறை அமைத்துத் தரமான உணவுகளைச் சமைத்து, அவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவசர நிமித்தம் காரணமாக விடுப்புக் கேட்கும்போது வழங்க வேண்டும். பாக்ஸ்கான் நிறுவனத்தினர், தமிழ்நாடு அரசு தெரிவித்த அனைத்து ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை தவறாமல் செயல்படுத்துவதாக தெரிவித்தனர். மேலும், சிப்காட் நிறுவனத்தின் மூலமாக, வல்லம் வடகாலில், ஊழியர்கள் தங்குவதற்கென விடுதிகள் சுமார் 18,750 பேர்கள் தங்கும் அளவில், ரூ.570 கோடி செலவில், 20 ஏக்கர் நிலப்பரப்பில், 8 தொகுதிகளாக, 11 மாடிகள் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளது….

The post பாக்ஸ்கான் நிறுவனம் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: தமிழக அரசு அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: