தேனி மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாக கொண்டாட்டம்

தேனி : தேனியில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை திமுகவினர் கொண்டாடினர்.

தேனி நகரம்

தேனி நகர திமுக சார்பில், தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தேனி நகர திமுக அலுவலகத்தின் முன்பாக அண்ணா பிறந்த நாள் விழா நடந்தது. விழாவிற்கு தேனி நகர திமுக செயலாளர் நாராயணபாண்டியன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியாபாலமுருகன் முன்னிலை வகித்தார். அப்போது அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அங்கே கூடியிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தேனி நகர்மன்ற துணைத் தலைவர் வக்கீல்.செல்வம், தேனி வடக்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், தேனி நகர அவைத்தலைவர் துரைராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லத்துரை, மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர்.சுகன்யா, மாவட்ட பிரதிநிதி பவுன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேனி ஒன்றியம்

தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தேனி ஊராட்சி ஒன்றிய திமுக செயலாளருமான சக்கரவர்த்தி தலைமையில் அண்ணா பிறந்த நாள் விழா தேனியில் உள்ள தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. அப்போது அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் தேனி வடக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் ராமதாஸ், தேனி ஒன்றிய முன்னாள் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முருகஜெகதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சின்னமனூர்- போடி

சின்னமனூர் நகர திமுக சார்பில் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகரச் செயலாளர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்ட தெற்கு மாவட்டம் திமுக செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பின ருமான ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து அவருடைய சிறப்புகள் குறித்தும் திமுக உருவான து பற்றியும் பல தகவல்களை எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் சின்னமனூர் நகர் மன்ற தலைவர் அய்யம்மாள்ராமு, பஞ்சாப் முத்துக்குமரன், முன்னாள் கவுன்சிலர் காசிமாயன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதே போல், போடியில் நகர திமுக சார்பில் போடி தேவர் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சின்னத்துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில், மாவட்ட பிரதி நிதிகள் பஷீர் அகமது, செல்வகுமார் மற்றும் திமுகவினர் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் பேரூர் மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் அண்ணா மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பேரூர் மன்ற உறுப்பினர்கள் திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

பெரியகுளம்

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.நிகழ்ச்சியில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சரவணகுமார், பெரியகுளம் நகர் கழகச் செயலாளர் முகமது இலியாஸ், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் மாவட்ட அவைத் தலைவர் செல்லபாண்டியன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பாண்டியன், சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன் மாவட்ட நிர்வாகிகள், நகர்கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், பேரூர் கழக செயலாளர்கள், பேரூர் மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட சார்புஅணி அமைப்பாளர்கள், மற்றும் துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணியினர், மாணவர் அணியினர், மகளிர் அணியினர், போக்குவரத்து தொமுச சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டி

ஆண்டிபட்டியில் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் தலைமையில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் நகரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து ஆண்டிபட்டி பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கிருந்த பேரறிஞர் அண்ணா சிலைக்கு எம்.எல்.ஏ மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கிருந்த திமுக கட்சி கொடியை எம்எல்ஏ மகாராஜன் ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், செயற்குழு உறுப்பினர் ஆசையன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செஞ்சூரி செல்வம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக்கேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தேனி மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாக கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: