கொல்கத்தாவில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் எஸ்.என். பானர்ஜி சாலை – பிளாச்மேன் சாலை சந்திப்பு அருகே பழைய பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட பொருள்கள் சேகரிக்கும் கடை உள்ளது. நேற்று மதியம் பாபி தாஸ்(58) என்பவர் இந்த சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கிருந்த மர்ம பொருள் வெடித்ததில் பாபி தாஸ் காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொல்கத்தாவில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: