அன்று காலை 10.30 மணி அளவில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 10 மணி அளவில் தி.நகரில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் இலவச புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தி.நகர் ஸ்ரீராம் வழங்குகிறார். மதியம் 12 மணிக்கு சைதாப்பேட்டையில் உள்ள அன்னை மறுவாழ்வு மையம், தரமணி பள்ளிப்பட்டு கானகத்தில் உள்ள சேவா சமய ஜெயம் காப்பகம், திருவான்மியூர் காக்கும் கரங்கள் முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சமபந்தி அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் அருள் பெத்தையா, இலக்கியா நடராஜன், ஓபிசி மாநில துணை தலைவர் ரவிராஜ் மற்றும் திருவான்மியூர் மனோகரன், சைதை வில்லியம்ஸ், பிரகாஷ், தரமணி கோபி, மலக்கொடி, பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணை உள்ளனர்.
The post முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்: தி.நகர் ஸ்ரீராம் தலைமையில் நாளை நடக்கிறது appeared first on Dinakaran.