பந்தலூர், செப்.14: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கப்பாலா முதல் மணல் வயல், மண்ணாத்தி வயல் வரை தார்சாலை கடந்த பல வருடங்களுக்கு முன் போடப்பட்டது. தற்போது, தார்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிறமப்பட்டு வந்தனர். அதனால் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சேரங்கோடு ஊராட்சி சார்பில் பிரதம மந்திரி கிராம சதக் ஜோஜனா திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ், கலந்து கொண்டு தார்சாலை பணியை துவக்கி வைத்தார். பந்தலூர் மேற்கு ஒன்றிய திமுக பொருளாளர் உமர், மாவட்ட விவசாய அணி துனை அமைப்பாளர் ஜார்ஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post தார் சாலை அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.