பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயிலை பாதுகாப்பாக இயக்க சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் சென்னை கடற்கரை பணிமனையில் 13-ம் தேதி மற்றும் 16-ம் தேதி இரவு 10.40 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரையில் (5 மணி நேரம் 50 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பகுதி நேர ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
முழுவதும் ரத்து செய்யப்படும் ரயில்கள்; சென்னை கடற்கரையிலிருந்து இன்று (13-ம் தேதி) மற்றும் 16-ம் தேதி இரவு 8.25, 8.55, 10.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையிலிருந்து 13-ம் தேதி மற்றும் 16-ம் தேதி இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து நாளை (14-ம் தேதி) மற்றும் 17-ம் தேதி காலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
* திருவள்ளூரில் இருந்து 13-ம் தேதி மற்றும் 16-ம் தேதி இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியிலிருந்து 13-ம் தேதி மற்றும் 16-ம் தேதி இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேரம் ரத்து செய்யப்படும் ரயில்கள்; சென்னை கடற்கரையிலிருந்து (13-ம் தேதி) மற்றும் 16-ம் தேதி இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.
* சென்னை கடற்கரையிலிருந்து நாளை (14-ம் தேதி) மற்றும் 17-ம் தேதி புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.
* செங்கல்பட்டிலிருந்து (13-ம் தேதி) மற்றும் 16-ம் தேதி இரவு 9.10, 10.10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.
* திருமால்பூரில் இருந்து 13-ம் தேதி மற்றும் 16-ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.
* கூடுவாஞ்சேரியிலிருந்து (13-ம் தேதி) மற்றும் 16-ம் தேதி இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் நிறுத்தப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு! appeared first on Dinakaran.