ஆந்திராவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 70 பேரை கடித்த பாம்புகள்

திருமலை : ஆந்திராவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 70 பேரை பாம்புகள் கடித்துள்ளது.ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெள்ளம் மக்களை திணறடித்து வருகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவை வெள்ளம் சூழ்ந்து எங்கு பார்த்தாலும் குடியிருப்புகள், வீடுகள் சாலைகளில் வெள்ளம் புகுந்தது. இதனையொட்டி முதல்வர் சந்திரபாபுவும் விஜயவாடாவில் கலெக்டர் அலுவலகத்திலேயே 10 நாட்கள் தங்கி வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.

மறுபுறம் ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகள் நிரம்பி வருகின்றன. இதனால் பாம்பு, முதலைகளும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் வருகின்றன. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர். விஜயவாடாவில் மட்டும் 70 பேரை பாம்பு கடித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஏலூர் மாவட்டத்தில் கொள்ளேறு ஏரி நிரம்பியதால் பல கிராமங்களுக்கு வெள்ள நீர் சென்றது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது வெள்ளத்தில் சாலையில் வந்த பாம்பு மீனை விழுங்க முயன்றது. ஆனால், அதற்குள் அங்கிருந்தவர்கள் பாம்பை கட்டையால் அடித்து கொன்றதால் பாம்பு வாயில் மீன் அப்படியே இருந்தது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வைரலானது.

The post ஆந்திராவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 70 பேரை கடித்த பாம்புகள் appeared first on Dinakaran.

Related Stories: