முதலமைச்சரின் வலியுறுத்தலை ஏற்று சென்னை தொழிற்சாலையில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்குகிறது .ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதால் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும். மீண்டும் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஃபோர்டு விரைவில் வெளியிட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 27 ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதலில் சான் ஃபிரான்ஸிஸ்கோ நகருக்கு சென்றார். அங்கு கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்
இதனைத் தொடர்ந்து தற்போது சிகாகோ நகருக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் அங்குள்ள நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கவும் அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்களையும் சந்தித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், போர்டு நிறுவனத்தை கொண்டு வர அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போர்டு உடனான 30 ஆண்டு கால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை பயன் உள்ளதாக அமைந்தது’ என குறிப்பிட்டுள்ளார்.
ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உற்பத்தி ஆலைகளை திறந்து செயல்பட்டு வந்தன. இதன்மூலம் எராளமானோர் பயன்பெற்று வந்தனர். இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட கார்களை சுமார் 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. ஃபோர்டு நிறுவனம். ஆனால் உற்பத்தியில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஆலைகளும் மூடப்பட்டன.
குஜராத்தில் செய்யல்பட்டு வந்த ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையும் மூடப்பட்டது. இந்நிலைலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலையை திறக்கும் வகையில் அந்நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சென்னையில் ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் ஏற்றுமதிக்கான கார் உற்பத்தி மேற்கொள்ளப்படும். ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்துள்ளது.
The post சென்னையில் ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க அந்நிறுவனம் முடிவு appeared first on Dinakaran.