ஊட்டி : ஊட்டியில் நடந்து வரும் முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் தாளூர் நீலகிரி கல்லூரி அணி வெற்றி பெற்றது.முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மைதானத்திலும்,மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பள்ளி மைதானங்களிலும் நடந்து வருகிறது.
ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் கால்பந்து,தடகள போட்டிகள் உட்பட பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், கடந்த இரு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கால்பந்து போட்டிகள் நடைபெற்றது.இதன் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.இதில் கூடலூர் அரசு கலைக் கல்லூரி அணியும், தாளூர் நீலகிரி கல்லூரி அணியும் மோதின.இதில் நீலகிரி கல்லூரி அணி வெற்றி பெற்றது.மூன்றாவது இடத்தை ஊட்டி அரசு கலைக் கல்லூரி அணி பிடித்தது.
தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட விளையாட்டு துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் ைகயுந்து பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடம் பிடித்தது.
ஊட்டி அரசு கலைக் கல்லூரி இரண்டாம் இடமும்,கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ‘பி’ அணியினர் மூன்றாம் இடம் பிடித்தனர்.கல்லூரி மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற வாலிபால் போட்டியில் கையுந்து பந்து போட்டிகளில் கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடம் பிடித்தது.குன்னூர் பிராவிடன்ஸ் மகளீர் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது. ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி மூன்றாமிடமும் பிடித்தனர்.
The post முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் நீலகிரி கல்லூரி வெற்றி appeared first on Dinakaran.