பாசன வாய்க்கால்களையும் தூர்வார்வேண்டும்

 

நீடாமங்கலம், செப். 13: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள புது தேவங்குடி, மேலாளவந்சேரி 24வது கிளைமாநாடு செல்லையின் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை வேலு ஏற்றினார். மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி மாநாட்டு துவக்க உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வமணி பேசினார்கள் . மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி நிறைவுறையாற்றினார. புதிய செயலாளர்களாக மேலாள வந்தச்சேரி ராஜேந்திரன், புது தேவங்குடி கோபாலகிருஷ்ணனன் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் புது தேவங்குடி, மேலாள வந்தசேரி ஊராட்சிகளில் அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார்வேண்டும். தேவங்குடியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீர்க்க வேண்டும், அனைவருக்கும் 100 நாள் வேலை கொடுக்க வேண்டும், சுழற்சி முறை அனுமதிக்கக்கூடாது. சுய உதவிக்குழுகளுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவங்குடி கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திறைவேற்றப்பட்டன.

The post பாசன வாய்க்கால்களையும் தூர்வார்வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: