தஞ்சாவூர், டிச. 31: ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பூதலூர் கிராமத்தை பேரூராட்சியாக மாற்றுவதை கைவிடக் வேண்டும் என கோரி கிராம பொது மக்கள் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு விவரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியான மிகவும் பின் தங்கிய கிராமம் பூதலூர் ஆகும். இங்கு, விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களுக்கு விவசாயத்தை தவிர வேறு தொழில்கள் கிடையாது. அதுவும் ஒரு போகம் மட்டும் விவசாயம் நடைபெறுகிறது. இதைத் தவிர 100 நாள் வேலை பார்க்கின்றனர்.
அதுவும், நூறு நாட்கள் முழுமையாக கிடைப்பதில்லை. மற்ற நாட்களில் திருச்சி அல்லது தஞ்சைக்கு தினக்கூலி வேலைக்குச் செல்கிறார்கள். பல பேருக்கு அரசு தொகுப்பு வீடு கூட கிடைக்கவில்லை. மேலும், கிராமப்புற நலிவடைந்த மக்களுக்கு அரசு தரும் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. ஆனாலும், தாலுக்கா மருத்துவமணை, தாலுக்கா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பத்திர பதவிதுறை அலுவலகம், அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசுக் கல்லூரி அனைத்தும் மக்கள் பிரதிநிதிகளின் முயற்றியால் பூதலூர் பகுதிக்கு கிடைத்துள்ளது.
ஆனனும் பல பேர் குடிமனை பட்டா கிடைக்காமல் மனு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்சன். அரசு தொகுப்பு வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மறு சீரமைப்பு வழியில்லை. ஆகவே மிகவும் ஆபத்தான வாழ்க்கை வாழ்ந்து வரும் பூதலூர் மக்களுக்கு அரசு பல்வேறு அலுவலகங்களை வழங்க வேண்டும். பேரூராட்சியாக மாற்றுவதன் மூலம் கட்ட வேண்டிய வரியை கூட கட்ட இயலாது. ஆகவே முழுக்க முழுக்க விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழிலையும் 100 நாள் வேலையையும் நம்பி இருக்கும் பூதலூர் கிராமத்தை பேரூராட்சியாக மாற்றும் அரசின் முயற்சியை கைவிட ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
The post பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும்: கலெக்டரிடம் கிராமத்தினர் மனு appeared first on Dinakaran.