இதுகுறித்து, அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பாஜவில் சேர்ந்து அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் எம்.பி மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேரில் சந்தித்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.
அதனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவ்வாறு அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்! appeared first on Dinakaran.