மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.5% வரை அதிகரித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 82,790 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 25,338 என்ற புதிய உச்சத்தை தொட்டது.