டெல்லி: பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பாராலிம்பிக்கில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்கள் வென்று இந்தியா 18ஆவது இடத்தை பிடித்தது.