கர்நாடகா: மண்டியா கலவரத்தில் இதுவரை 52 பேரைக் கைது செய்துள்ளோம் என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். கலவரம் நடந்த மண்டியாவிற்கு பாதுகாப்புக்காக பெங்களூரிலிருந்து கூடுதலாக காவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். கலவரத்தில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது; யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என பரமேஸ்வர் கூறியுள்ளார். மண்டியா மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினரிடையே கலவரம் வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது.
The post கர்நாடகா மாநிலம் மண்டியா கலவரத்தில் இதுவரை 52 பேர் கைது!! appeared first on Dinakaran.