சிதம்பரம் அருகே பு. முட்லூர் விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை நெடுஞ்சாலையில் கார் – லாரி நேருக்கு மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த யாசர் அராபத் (40), முகமது அனவர் (56), ஹாஜிதா பேகம் (62), சாராபாத் நிஷா (30) மற்றும் அப்னான் (2) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்தித்துவிட்டு, வீடு திரும்பும்போது ஏற்பட்ட லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதச பரிசோதனைக்காக சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.