3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?

சென்னை: 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பொருளாதார வல்லுநர் சோம வள்ளியப்பன் விளக்கமளித்துள்ளார். ஜனவரி 24 பிறகு மிக அதிக அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. உக்ரைன் வார், மிட்டில் ஈஸ்ட் வார் என்ற காரணத்தினால் உயர்ந்தாலும் மீண்டும் இரங்கி இப்பொது பல மாதங்களில் இல்லாத அளவாக 70 டாலருக்கு அருகே வந்துள்ளது. இந்த குறைப்பிற்கான காரணம் லிடியன் ஆயில் வராமல் இருந்தது தற்போது சந்தைக்கு வருகிறது.

அதை தவிர ஒபிக் கவர்கள் குறைப்பதற்கு ஒப்புக்கொண்டிருந்த காலக்கெடு முடிந்து மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க உள்ளனர். இத்தகைய வரத்து அதிகரிப்பால் சீனாவில், அமெரிக்காவில் தேவை குறைந்துள்ளது. தேவை குறைப்பால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து கொண்டுள்ளது. இந்தியாவில் வெகு நாட்களாக குறைக்கப்படாமல் உள்ள பெட்ரோல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெட்ரோலை இறக்குமதி செய்து சுத்திகரித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் நிறுவங்களின் லாபங்கள் கடந்த காலாண்டுகளில் சிறப்பாக இருந்து வருகிறது.

இந்தியாவில் இரு மாநிலங்களில் தேர்தல் வருகின்றன காரணத்தினால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை வெகுநாட்களாகவே குறைந்துள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை மேலும் சில வாரங்கள் கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை சரிந்தால் சில வாரங்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி ஆலோசனை? நடத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

The post 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: