இஸ்ரேல் படை தாக்குதலில் காசாவில் 40 பேர் பலி


காசா: இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் காசாவில் 40 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இன்று (செப். 10) காசாவின் முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கான் யூனிஸ் பகுதி போரின் ஆரம்பத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 20 முதல் 40க்கும் மேற்பட்ட கூடாரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஹமாஸ் கட்டுப்பாட்டு மையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

The post இஸ்ரேல் படை தாக்குதலில் காசாவில் 40 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: