அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? : நியூயார்க் போலீசார் விளக்கம்

வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் பரப்புரை செய்ய இருந்த இடத்திற்கு அருகே இருந்த காரில் வெடிப்பொருட்கள் இருந்ததாக தகவல் பரவிய நிலையில், வெடிப் பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று நியூயார்க் போலீஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரீஸும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நியூயார்க்கின் யூனியன் டேல் என்ற இடத்தில், உள்ளூர் நேரப்படி, நேற்று இரவு 7 மணி அளவில் ட்ரம்பின் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

அப்போது, அங்கிருந்த கார் ஒன்றில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் பரவியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள நியூயார்க் போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து எந்த மாதிரியான வெடிப்பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த 15ம் தேதி புளோரிடாவில் ட்ரம்பிற்கு சொந்தமான கோல்ப் மைதானத்தில் அவர் விளையாடி கொண்டு இருந்த போது, துப்பாக்கிச் சூடு நடத்திய 58 வயது நபரை ரகசிய பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அந்த சம்பவம் நடந்த 3வது நாளிலேயே ட்ரம்ப் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே வெடிப் பொருட்கள் இருப்பதாக பரவிய செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? : நியூயார்க் போலீசார் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: