குண்டூரில் பாம்பு கடித்து பலியான ஏமன் நாட்டை சேர்ந்த இளைஞர்

திருமலை : ஏமன் நாட்டைச் சேர்ந்த கொண்டண்ணா(38). இவர் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் எம்ஏ பௌத்தம் படிப்பதற்காக கடந்த மாதம் இங்கு வந்தார். பல்கலைகழகத்தில் உள்ள சர்வதேச மாணவர் விடுதியில் தங்கி படிக்கிறார். கடந்த 7ம் தேதி இரவு 10 மணியளவில் அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு நண்பருடன் வெளியே சென்றுள்ளார். இவர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகம் அருகே ஒரு இடத்தில் காளான்களை சேகரித்துக் கொண்டிருந்த போது கொண்டன்னாவை பாம்பு கடித்துள்ளது.

ஏமனில் யாரையாவது பாம்பு கடித்தால் அதைக் கொன்றுவிட்டு மருத்துவமனைக்குச் கொண்டு செல்வதும் எந்த பாம்பு கடித்தது என பார்த்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது அங்கு வழக்கம். அதனால் அதேபோன்று பாம்பு கடித்த பிறகு, கொண்டன்னா மருத்துவமனைக்குச் செல்லாமல் அதைத் தேடி கிட்டத்தட்ட 2 மணி நேரம் வீணடித்தார். பாம்பை பிடித்து கொன்ற பிறகுதான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்று கொண்டன்னா 10.30 மணி முதல் 12 மணி வரை கடித்த பாம்பை தேடி இறுதியாக பாம்பை கண்டுபிடித்த அவர்கள் அதைக் கொன்றுவிட்டு உடனடியாக மங்களகிரியில் உள்ள என்ஆர்ஐ மருத்துவமனைக்குச் சென்றனர்.

இருப்பினும், மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினாலும் காலதாமதத்தால் கொண்டன்னா உயிர் இழந்தார். மியான்மரில் உள்ள கியாவா பௌத்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த கொண்டன்னா, உயர்கல்விக்காக இங்கு வந்தார். திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில், மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியா வந்த மாணவன் இப்படி உயிரிழந்துள்ளதால், சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே மியான்மர் மாணவர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள கால்வாய் கரையில் நடந்ததாக பதிவாளர் சிம்ஹாசலம் தெரிவித்தார். இதுகுறித்து பெடகக்காணி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த இடம் துக்கிராலா காவல் நிலைய எல்லையில் வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடித்த பாம்பை தேடியது ஏன்?

ஏமனில் யாரையாவது பாம்பு கடித்தால் அதைக் கொன்றுவிட்டு மருத்துவமனைக்குச் கொண்டு செல்வதும் எந்த பாம்பு கடித்தது என பார்த்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது அங்கு வழக்கம். அதனால் அதேபோன்று பாம்பு கடித்த பிறகு, கொண்டன்னா மருத்துவமனைக்குச் செல்லாமல் அதைத் தேடி கிட்டத்தட்ட 2 மணி நேரம் வீணடித்ததால் இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

The post குண்டூரில் பாம்பு கடித்து பலியான ஏமன் நாட்டை சேர்ந்த இளைஞர் appeared first on Dinakaran.

Related Stories: