விராலிமலை,செப்.6: விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது இதில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளி தாளாளர் வெல்கம் மோகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புலவர் சந்தான மூர்த்தி, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிவக்குமார், இந்திய தூதர் தட்ஷணா மூர்த்தி, ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர்கள் துரைராஜ், பாலசுப்பிரமணியன் பங்கேற்று நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினர் நிர்வாக இயக்குநர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.இதே போல், விராலிமலை அன்னவாசல்,இலுப்பூர் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
The post விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி பள்ளிகளில் ஆசிரியர் தின விழா appeared first on Dinakaran.