மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 82,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. சென்செக்ஸ் தற்போது 520 புள்ளிகள் சரிந்து 82,035 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 177 புள்ளிகள் சரிந்து 25,102 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.