மல்லசமுத்திரத்தில் அட்டகாச சம்பவம்; குடிமகன்களால் சூறையாடப்பட்ட அரசுப்பள்ளியின் 7 வகுப்பறைகள்: மதுபாட்டில்கள், சிகரெட்டுகளை வீசிச்சென்ற அவலம்

மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 30ம் தேதி மாணவிகள் வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பினர். நேற்று காலை பள்ளிக்கு மாணவிகள் வந்தனர். அப்போது 7 வகுப்பறைகளில் உள்ள மின்விசிறி, சேர், டேபிள் மற்றும் புத்தகங்கள் சூறையாடப்பட்ட நிலையில் கிடந்தது. அங்கு மர்மநபர்கள் பீர், பிராந்தி, சிகரெட், உணவு பார்சல்கள் மற்றும் குளிர் பானங்களை அருந்தி விட்டு போட்டுச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, மல்லசமுத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பள்ளிக்கு வாட்ச்மேன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத காரணத்தால் மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு போதையில் பொருட்களை உடைத்துச் சென்றுள்ளனர். எனவே பள்ளிக்கு வாட்ச்மேன் மற்றும் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

The post மல்லசமுத்திரத்தில் அட்டகாச சம்பவம்; குடிமகன்களால் சூறையாடப்பட்ட அரசுப்பள்ளியின் 7 வகுப்பறைகள்: மதுபாட்டில்கள், சிகரெட்டுகளை வீசிச்சென்ற அவலம் appeared first on Dinakaran.

Related Stories: