ஹேமா கமிட்டி விவகாரம் ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்: அர்ஜுன் கருத்து

ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களிடம் கூறியது:, உலகத்தில் எல்லா இடங்களிலும் இதுபோல் நடந்து கொண்டிருக்கிறது.. இதுபோன்று எத்தனை கமிட்டிகள் வந்தாலும், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் நிறுத்த முடியும். எல்லா இடத்திலும், நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள். எந்த துறையாக இருந்தாலும் இது போன்ற பிரச்னைகள் நடக்கிறது. குறிப்பிட்ட இடத்தில்தான் நடக்கிறது என்று சொல்லிவிட முடியாது.

மேலும், இந்த விஷயத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தால்தான் முடியும். ஒரு சிலர் ஆதாரமில்லாமல் இது போன்ற விஷயங்களை சொல்வதால் அதை நம்பலாமா? வேண்டாமா? என்று தோன்றுகிறது. நிறைய அப்பாவி பெண்கள் இருக்கிறார்கள். அதேநேரம், ஒரு சிலர் இதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

 

The post ஹேமா கமிட்டி விவகாரம் ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்: அர்ஜுன் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: