வரும் 14ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்: பிரேமலதா அறிவிப்பு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை:தேமுதிகவின் 20ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 14ம் தேதி முப்பெரும் விழாவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், பத்மபூஷன் விருதுக்காக விஜயகாந்தை கவுரவிக்கும் விழா, 20ம் ஆண்டு கட்சியின் துவக்க நாள் விழா, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா, அவர் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

தேமுதிக துவக்க நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றுதல், இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கொள்கைப்படி நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் முறையாக காவல் துறை அனுமதி பெற்று வருகிற 14ம் தேதி மாலை மாபெரும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post வரும் 14ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்: பிரேமலதா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: