மண் புழு உரம் தயாரிப்பு செயல்விளக்க பயிற்சி

தேன்கனிக்கோட்டை, ஆக.31: கெலமங்கலம் வட்டாரத்தில், வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், சின்னட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண் புழு உரம் தயாரிப்பு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கு கெலமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர் தலைமை வகித்து பேசினார். இயற்கை விவசாயம் மற்றும் நன்மைகள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவையின் பயன்பாடுகள் குறித்து வேளாண்மை அலுவலர் பிரியா விளக்கினார். மண் புழு உரம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்கள், மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து அதியமான் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் ஞான கீர்த்தி விளக்கினார். துவரை சாகுபடி மற்றும் துவரை நுனி கிள்ளுவது குறித்தும், மானிய திட்டம் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் முனிராஜ் விளக்கினார். அட்மா திட்டம் மற்றும் பஞ்சகாவியம் தயாரிப்பு, அதன் பயன்கள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா விளக்கினார். ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பிரபா ஜெயராமன் மற்றும் 40க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post மண் புழு உரம் தயாரிப்பு செயல்விளக்க பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: