காரியாபட்டி, ஆக.30: காரியாபட்டியில் ரூ.10 கோடி மதிப்பிட்டில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடங்களை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார். காரியாபட்டி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் தேவைக்காக ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு அம்ரூத் 2.0 என்ற திட்டத்தில் ரூ.10.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் 15 வார்டுகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் புதிதாக குடிநீர் குழாய் இணைப்புக்கள் அமைக்கப்படும். மேலும் 5 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படும். மேல்நிலை தொட்டிகள் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை பேரூராட்சி தலைவர் செந்தில், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
The post காரியாபட்டியில் ரூ.10 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்: பேரூராட்சி தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.